பதிவு செய்த நாள்
08
ஜூன்
2023
01:06
திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், ரூ.3.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது. திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோவில் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கை, நேற்று முன்தினம் காவடி மண்டபத்தில், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில், உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம், குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், நிரந்தர உண்டியல் மூலம் 3 கோடியே 10 லட்சத்து 40ஆயிரத்து 748 ரூபாயும், 2 கிலோ 800 கிராம் தங்கம், 25 கிலோ வெள்ளி மற்றும் அயல் நோட்டு 292ம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில், இந்து சமய அறநிலையத்துறை துாத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்துார் ஆய்வாளர் செந்தில் நாயகி, பொதுமக்கள் பிரதிநிதியாக வேலாண்டி ஓதுவார், கருப்பன், மோகன் அயல்பணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.