மேலுார்; மேலுார், அண்ணா காலனியில் பூவாடை தொட்டிச்சி காளியம்மன், பங்களா முணியாண்டி, சங்கிலி கருப்புசாமி கோயில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 15 நாள் காப்பு கட்டி விரதமிருந்தனர். இன்று மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கேயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிசேஷகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும், தீச்சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டது. இத் திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.