ஓசூர் பக்த ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2023 03:06
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாருதி நகரில் உள்ள பக்த ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாருதி நகரில் பக்த ஆஞ்சநேய சுவாமி கோவில்அமைந்துள்ளது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் கடந்த சனிக்கிழமை கங்கா பூஜை, தீபாராதனை, கலசபிரதிஷ்டை, கணபதி பூஜை, புன்யாஹவசனம், அங்குரார்பனம், வாஸ்து பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்த ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.