பதிவு செய்த நாள்
15
ஜூன்
2023
10:06
சித்திரை - 3, 4: எவ்வளவு பணிச்சுமை என்றாலும் சளைக்காமல் அதை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திராதிபதி செவ்வாய் ராசி நாதனுடன் சேர்க்கை பெற்று தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கிறார். குரு அனுகூலம் பெறுவதால் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். மேலிடத்தின் மூலம் அனுகூலம் கிடைக்கும். களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் ராஹுவுடன் இணைந்து இருந்தாலும், அவரின் பார்வை ராசியின் மீது விழுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும். பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 16; ஜூலை 13, 14
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 6
சுவாதி: முயற்சிகளினால் வெற்றி பெறும் உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திராதிபதி ராஹூ ராசிக்கு ஏழாம் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். ஜெனன கால சந்திரனுக்கு மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக இருக்கிறார்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ராசிநாதன் சுக்கிரனின் சார பலன்கள் மூலம் இசை நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும். ராசியில் இருக்கும் கேது பகவான் குரு பகவானின் பார்வை பெறுகிறார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆடர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறையும். பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். அரசியல்துறையினர் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எதிர்ப்புகள் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.
பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 16, 17; ஜூலை 14
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 7
விசாகம் - 1, 2, 3: தலைமை தாங்கி துணிச்சலுடன் எதையும் செய்யும் ஆற்றல் பெற்ற உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திராதிபதி குரு ராஹூவுடன் இணைநந்து ராசியைப் பார்க்கிறார். சுபச்செலவு அதிகரிக்கும். நட்சத்திராதிபதி குருவின் சஞ்சாரம் மூலம் சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக் கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். பஞ்சம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பெண்களுக்கு: மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வதில்லை உயரும். அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்களுக்கு: மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.
பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 17, 18; ஜூலை 15
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 8, 9