Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : வைகாசி ராசி பலன்  ரிஷபம் : ஆனி ராசி பலன் ரிஷபம் : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
மேஷம்: ஆனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
மேஷம்: ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
03:06

அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதனுடன் கேது இணைந்திருப்பதால் குடும்பத்தில் சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும் என்றாலும், லாப ஸ்தானத்தில் குருபார்வையுடன் சஞ்சரிக்கும் ராகு உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். வருமானத்தை அதிகரிப்பார். பணப்புழக்கத்தை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகளை விலக்குவார். செய்து வரும் தொழிலை விரிவு செய்ய வைப்பார். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உழைப்பாளர்களுக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற லாபம் உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். மாதத்தின் பிற்பகுதியில் சிலர் புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 6, 7

அதிர்ஷ்ட நாள்: ஜூன்16,18, 25, 27. ஜூலை 9,16

பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட நன்மைகள் நடக்கும்.


பரணி; நினைத்ததை சாதித்து விட வேண்டும் என்ற மனநிலை கொண்ட உங்களுக்கு இம்மாதம் அதிர்ஷ்டமான மாதம். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மைகளை வழங்க இருக்கிறார். தடைபட்ட வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த குழப்பம், நெருக்கடி விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். பொன், பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். குரு பகவானின் பார்வை 7,9,11ம் இடங்களுக்கு உண்டாவதால் நண்பர்களால் ஆதாயம் கூடும். நீண்ட நாளாக போக நினைத்திருந்த கோயில்களுக்கு போய் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் புதிய இடம் வாங்குவர். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் நம்பிக்கை உண்டாகும். சிறிய வேலைகளையும் முடிக்க முடியாமல் போராடி வந்தவர்களுக்கு பெரியோரின் ஆதரவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். உயர் கல்வி கனவு நனவாகும். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வார்த்தைகளில் நிதானமும், செயல்களில் அக்கறையும் இருக்கும். முயற்சிகள் வெற்றியாகும். பெண்களுக்கு குடும்ப நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை ஏற்படும். சேமிப்பு உயரும். உடல்நிலை சீராகும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 7, 8.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27. ஜூலை 6, 9, 15.

பரிகாரம்: பூவரசங்குப்பம் லட்சுமி நாராயணரை வழிபட நினைப்பது நடந்தேறும்.


கார்த்திகை 1 ம் பாதம்; முயற்சியில் உறுதியாக இருந்து முன்னேற்றப் பாதையில் நடை பயிலும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதம். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார்.  தடைபட்டிருந்த வேலைகள் ஒவ்வொன்றும் இந்த மாதத்தில் நடந்து முடிவிற்கு வரும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வருமானம் உயரும். ஜூன் 22 முதல் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தடைபட்ட வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த கடன் தொகை கைக்கு வரும். குரு பகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் கூட்டுத் தொழில் லாபம் அடையும். நண்பர்கள் ஒத்துழைப்பர்.  குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். சிலருக்கு சொத்து சேரும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நீண்ட நாளாக தள்ளிப்போன இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். புதிய பொறுப்பு கிடைக்கும். குடும்பத்தின் மீது அக்கறை கூடும். சிறு வியாபாரிகளின் நிலை உயரும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். வம்பு வழக்குகளால் ஏற்பட்ட நெருக்கடி தீரும்.  வியாபாரிகளுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கையில் பணப்புழங்கும். குடும்பத்தினர் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பொன், பொருள் சேரும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 9.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 19, 27, 28, ஜூலை 1, 10.

பரிகாரம்: சுவாமிமலை முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar