Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : ஆனி ராசி பலன் கன்னி : ஆனி ராசி பலன் கன்னி : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
சிம்மம் : ஆனி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம் : ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
03:06

மகம்

வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் கேதுவும், செவ்வாயும் சஞ்சரிப்பதால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். ஏதோ ஒன்றை இழந்தது போல் மனம் தவிக்கும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணியில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். பெண்களுக்கு உடல் நிலையில் சங்கடங்கள் தோன்றி மறையும். குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். ஜூன் 22 வரை புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருபார்வை ஏற்படுவதால் கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். உங்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விவசாயிகளின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 18, 19, ஜூலை 16.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 19, 25, 28, ஜூலை 1, 7, 10.

பரிகாரம்: வல்லப கணபதியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


பூரம்

நினைத்ததை சாதிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதம். லாப ஸ்தானத்தில் ராசிநாதனும் ஞானக்காரகன் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவற்றிலும் வெற்றி ஏற்படும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட வேலைகள் வெற்றியாகும். ஜூன் 29 முதல் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் செலவுகள் கட்டுக்குள் வரும். ஜென்ம ராசிக்குள் ஞான மோட்சக்காரகன் கேதுவும், தைரிய வீரிய காரகன் செவ்வாயும் சஞ்சரிப்பதால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட்டு வம்பை நீங்களே விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும். எதிர்பாராத பிரச்னைகள் தோன்றி உங்களை சங்கடப்படுத்தும். அதே நேரத்தில் குரு பகவானின் பார்வை 3, 5, 7 ம் இடங்களுக்கு உண்டாவதால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தைரியம் அதிகரிக்கும். என்ன வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயிகள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது நல்லது.  பணியாளர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். பெண்கள் சிலருக்கு வயிறு சம்பந்தமான பாதிப்புகள் தோன்றி சங்கடப்படுத்தும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 19, 20.

அதிர்ஷட நாள்: ஜூன் 15, 24, 28. ஜூலை 1, 6, 10, 15.

பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் யாவும் மறையும். 


உத்திரம் 1 ம் பாதம்

வெற்றி ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டு வாழும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதம். உங்கள் ராசிநாதனும், நட்சத்திர அதிபதியுமான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். கடன் தொல்லை மறையும்.  சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக தவமிருந்தவர்களின் ஏக்கம் தீரும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு லாபஸ்தான குருவின் பார்வை உண்டாவதால் நண்பரால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். ஜென்ம ராசிக்குள் செவ்வாயும், கேதுவும் சந்திப்பதால் செயல்களில் தடை, நெருக்கடி ஏற்படும். மனம் குழப்பம் அடையும். இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு உங்களை நீங்களே சங்கடப்படுத்திக் கொள்வீர்கள். உடல்நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். இளம் வயதினர் சிலருக்கு காதலால் பிரச்னைகள் தோன்றும். வயதானவர்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் ஏற்படும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். பணியாளர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 20.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 28. ஜூலை 1, 10.

பரிகாரம்: நன்மை தருவாரை வழிபட நினைத்தது நிறைவேறும். 

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar