Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: ஆனி ராசி பலன் மிதுனம் : ஆனி ராசி பலன் மிதுனம் : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
ரிஷபம் : ஆனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
 ரிஷபம் : ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
03:06

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்

தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ஞானக் காரகன் குருவுடன் இணைவதால் வார்த்தைகளில் தெளிவு இருக்கும். எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கக்கூடிய வழி பிறக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளின் நிலை உயரும். வியாபாரிகளுக்கு தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தடைபட்டு வந்த முயற்சிகள் இக்காலத்தில் வெற்றியாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய சொத்து, வாகனம் சேரும் என்றாலும், சுகஸ்தானத்தில் செவ்வாய் கேது இணைந்து சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். பெண்கள் நிலையில் இருந்த சங்கடங்கள், பிரச்னைகள் விலகி மனம் தெளிவடையும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 9.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 19, 24, 28, ஜூலை 1, 6, 10, 15


பரிகாரம்: சிவபெருமானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


ரோகிணி

புத்தி சாதுரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் 6, 8, 10 ம் இடங்களைப் பார்ப்பதால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் உண்டான தடைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.  உத்தியோகத்தில் ஏற்பட்டு வந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக தொடர்ந்து முயற்சி செய்தும் தடைகளையே சந்தித்து வந்தவர்களுக்கு இக்காலம் யோக காலமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தம்பதிக்கிடையே இணக்கம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.  சிலர் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்டு வந்த பாதிப்பு விலகும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நீண்டநாள் கனவு நனவாகும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 10.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 20, 24, 29. ஜூலை 2, 6, 11, 15.

பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.


மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்

துணிச்சலுடன் செயல்பட்டு  சாதனை படைக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் லாபமான மாதமாகும். தைரிய வீரிய காரகனான செவ்வாயும், ஞான மோட்ச காரகனான கேதுவும் சுகஸ்தானத்தில் சஞ்சரித்து உடல் நிலையில் சின்னச் சின்ன சங்கடங்களை ஏற்படுத்தி வந்தாலும், தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் அதிர்ஷ்டக்காரன் சுக்கிரனும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். தடைபட்டு வந்த வேலைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். தொழிலில் ஏற்பட்ட போட்டிகள், மறைமுக எதிர்ப்பு விலகும். நினைத்ததை சாதிக்கும் காலமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். ஜீவன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியை தரும். வர வேண்டிய பணம் வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை அமையும். நீண்ட கால முயற்சிகள் இக்காலத்தில் நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கையுடன் புதிய இடம் வீடு வாங்கும் யோகமும் சிலருக்கு உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் உழைப்பிற்கேற்ற ஆதாயத்தை இக்காலத்தில் காண முடியும். பணியாளர்களுக்கு ஆதாயம் கூடும். நெருக்கடி விலகும். வரவு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 11.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27. ஜூலை 6, 9, 15.

பரிகாரம்: காமாட்சி அம்மனை வழிபட நன்மைகள் நடக்கும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar