Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : ஆனி ராசி பலன் சிம்மம் : ஆனி ராசி பலன் சிம்மம் : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கடகம் : ஆனி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம் : ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
03:06

புனர்பூசம் 4 ம் பாதம்

வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞானக்காரகன் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்றாலும் அவை யாவும் சுபச் செலவுகளாகவே இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். சிலர் இடம், வீடு என புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குருவின் பார்வைகள் 4, 6, 8 ம் இடங்களுக்கு உண்டாவதால் உங்கள் நிலையில் இருந்த சங்கடங்கள் இல்லாமல் போகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வம்பு, வழக்கு என்றிருந்த நிலைகள் மாறும். அஷ்டம சனியும், ராகுவும் வழங்கி வந்த சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி உங்களால் நடத்திக் கொள்ள முடியும் என்றாலும், குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் வரவு செலவிலும், வார்த்தைகளிலும் கவனமாக இருப்பதுடன் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன்னதாக நன்றாக யோசிக்கவும். பணியாளர்கள் தங்களுக்கு எத்தகைய செல்வாக்கு இருந்தாலும் மேலதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவதும், வேலையில் நேர்மையாக இருப்பதும் இக்காலத்தில் அவசியம்.

சந்திராஷ்டமம்: ஜூன் 16, ஜூலை 13.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 21, 29, 30, ஜூலை 2, 3, 11, 12.

பரிகாரம்: தத்தாத்ரேயரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.


பூசம்

மனதில் வலிமையும், நினைத்ததை சாதிப்பதில் உறுதியும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதம். கர்மக்காரகன் சனி ஜூலை 2 முதல் வக்கிரமாவதால் அவரால் உண்டான பாதிப்பு இனி விலகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகுவிற்கும் குருபார்வை உண்டாவதால் உங்களை வாட்டி வதைத்து வந்த சங்கடங்கள் இல்லாமல் போகும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் எதிர்பாராத செலவுகளை ஏற்படுத்துவார். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளால் நெருக்கடிகளை உண்டாக்குவார். சிலருக்கு திடீர் இட மாற்றத்தையும் ஏற்படுத்துவார். வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லை என்ற கவலை உண்டாகும். இக்காலத்தில் புதிய முதலீடு செய்வதற்கு முன் பலமுறை யோசிப்பது நன்மையாகும். அரசு வழியில் எதிர்பாராத நெருக்கடிகளை சிலர் சந்திக்க நேரும். அரசியல்வாதிகளுக்கு இக்காலம் போராட்ட காலமாக இருக்கும். நீங்கள் பெரியதாக நம்பியவர்களும் இக்காலத்தில் உங்களைக் கண்டு கொள்ளாமல் போகலாம். எதிர்பார்ப்பு இழுபறியாகலாம் என்பதால் செயல்களில் நிதானமும் கவனமும் தேவை. கையிருப்பு ஏதேனும் ஒரு வகையில் கரைவதற்கு வாய்ப்பிருப்பதால் அசையா சொத்து, பொன், பொருள் வாங்குவது நன்மையாகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் அவர்களின் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையை அதிகரிக்கும். ஆறாமிடத்திற்கு குருபார்வை உண்டாவதால் உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். 

சந்திராஷ்டமம்: ஜூன் 16, 17. ஜூலை 14.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 26, 29. ஜூலை 2, 8, 11.

பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட நினைப்பது நடந்தேறும். 


ஆயில்யம்

பொறுப்புடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி அடையும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் உழைப்பால் முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். ஜூன் 22 வரை புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் மாதம் முழுவதும் குரு, சூரியனும் அங்கு சஞ்சரிப்பதால் பல வழியிலும் செலவு ஏற்படும். மனதில் நிம்மதி என்பது இக்காலத்தில் இல்லாமல் போகும். நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக செலவுகளும் பிரச்னைகளும தோன்றும். ஜூன் 22 முதல் ஜென்ம ராசிக்குள் புதன் சஞ்சரிப்பதால் போராட்ட நிலை மாறும். திடீர் பயணங்கள் ஏற்பட்டாலும் அதன் வழியாக உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விரய குருவின் பார்வைகள் சுக, சத்ரு,  அஷ்டம ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய சக்தி உண்டாகும். இக்காலம் உங்களுக்கொரு சவாலான காலமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் இக்காலத்தில் அதிகபட்ச எதிர்பார்ப்பு வேண்டாம். புதிய முதலீடுகளில் கவனமாக இருப்பது அவசியம். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். இந்த நேரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் முன்பிருந்த பாதிப்பு குறையும். பிறரால் ஏற்பட்ட அவமானம், நெருக்கடி விலகும். உங்கள் தனித்தன்மையும் செல்வாக்கும் வெளிப்படும். சமூகத்தில் உங்களுக்குரிய அந்தஸ்தை அடைவீர்கள். தனியார் நிறுவன பணியாளர்கள் தங்கள் வேலையில்  கவனம் செலுத்துவது நல்லது.  தேவைக்கேற்ற பணம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 17, 18, ஜூலை 15.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, 29, ஜூலை 2, 5, 11, 14.

பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறை யாவும் தீரும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar