சேத்தூர்: சேத்தூரில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற 27வது ஆண்டு விழா நடந்தது. போஸ் கொடியேற்றி துவக்கி வைத்தார்.ஆன்மீக ஊர்வலத்தை மாவட்ட தலைவர் பத்மநாபன் துவக்கி வைத்தார். கலச விளக்கு பூஜையும் நடந்தது. ஆன்மீக ஊர்வலத்தில் சிறப்பு அலங்காரத்திர்ல் ஆதிபராசக்தி சப்பரம் செல்ல பின்னர் மன்றத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பெண்கள்,குழந்தைகள் கஞ்சிக்கலையம், முளைப்பாறி,அக்கினிசட்டி எடுத்து வந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை சேத்தூர் வழிபாட்டு மன்றத்தினர் செய்தனர்.