திண்டுக்கல், ; அகில இந்திய ஹிந்து மகா சபா சார்பில் கொண்டு வரப்பட்ட ஸ்படிக லிங்கத்திற்கு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அகில இந்திய ஹிந்து மகா சபா சார்பில் காசியிலிருந்து இரண்டரை லட்சத்திற்கு ஸ்படிக லிங்கத்தை வாங்கி சென்னையில் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து திருப்பத்துாருக்கு எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட ஸ்படிக லிங்கம் கோட்டை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டது. அதன்பின் 108 விநாயகர் கோயிலிலிருந்து 111 பால்குடம் எடுத்து வரப்பட்டு ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தேசிய தலைவர் ஸ்ரீஜி, தேசிய அமைப்பு செயலாளர் நாகலட்சுமி,மாநில செயலாளர் ரெங்கசாமி,மாநில தென்மண்டல துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி,திண்டுக்கல் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.