* மறுமை நாள் வந்தே தீரும். அதில் சந்தேகம் இல்லை. * ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார். * ஆட்சி செலுத்தும் அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. * பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என நினையுங்கள். * கொடுமையையும், அநீதியான செயல்களையும் யார் மன்னிக்கிறாரோ அவருக்கு கூடுதல் நன்மை உண்டு. * அநீதி இழைக்கும் கொடுங்கோல் அரசனிடத்தில், சத்திய நெறியை கூறுவதே சிறந்த அறப்போர். * அளவு கடந்த மகிழ்ச்சியினால் சத்தியப்பாதையில் இருந்து விலகிவிட வேண்டாம். * கோபம் வரும்போது உணர்ச்சிவசப்பட்டுத் தகாத செயலில் இறங்கிவிடாதீர்கள். * தானியத்தை பதுக்கி வைப்பவனும் குற்றவாளி ஆவான். * பதவியில் இருக்கும்போது, உங்களுக்கு உரிமையில்லாத பொருளை பயன்படுத்தாதீர்கள். * மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள். – பொன்மொழிகள்