நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிறரைச் சார்ந்துதான் வாழ்கிறோம். முகம் தெரியாத எத்தனையோ நபர்கள் தினமும் நமக்கு உதவி செய்கிறார்கள். சாப்பிடும் அரிசி, உடுத்தும் ஆடை என பல பொருட்களை உருவாக்கியவர்களை நமக்குத் தெரியாது. அவர்களது உழைப்பு புரியாது. ஆனால் சிலர் உணவை வீணாக்குகின்றனர். என்னதான் பணம் கொடுத்து வாங்கினாலும், அவர்களது உழைப்புக்கு மரியாதை தருவதுதானே முறை. உணவு மட்டுமல்ல. எந்தப் பொருளை வாங்கினாலும் அதை வீணாக்காதீர்கள்.