திரவுபதி அம்மன் கோயிலை திறக்க உத்தர விட முடியாது; சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2023 01:06
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் மேல்பாதி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்கவில்லை எனக் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, ஜூன் 7ம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து கோவிலை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி கரிபாளையத்தைச் சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில், கோவிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படவில்லை எனவும், தீண்டாமை பின்பற்றப்படவில்லை, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, கோவிலுக்கு சீல் வைக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. கோயிலை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் அறநிலையத் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்றம் மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவு அளித்து, அறநிலையத் துறையை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.