Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்டலம் 40 அடி உயர விஸ்வரூப ... சிவபுரீஸ்வரர் கோவிலில் 29,000 ஓலைச்சுவடிகள், 351 இலக்கிய சுவடிக்கட்டுகள், தங்கம், வெள்ளி ஏடுகள் கண்டெடுப்பு சிவபுரீஸ்வரர் கோவிலில் 29,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகா ஒட்டு மொத்த மனித குலத்திற்கே சொந்தமானது: பாரிஸில் சத்குரு பேச்சு
எழுத்தின் அளவு:
யோகா ஒட்டு மொத்த மனித குலத்திற்கே சொந்தமானது: பாரிஸில் சத்குரு பேச்சு

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2023
01:06

தொண்டாமுத்தூர்: பாரிஸில் உள்ள யுனெஸ்கோவின் தலைமையகத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில், யோகா ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.

யுனெஸ்கோ சார்பில், 9வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, யோகா தின நிகழ்ச்சி, பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில், சத்குரு சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் அவர் பேசுகையில்," யோகா பாரத தேசத்தில் தோன்றியது என்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். ஆனால், அனைவரும் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான தேசப்பற்று கொண்ட சிலர், என்னுடைய இந்த கருத்துடன் முரண்படுவார்கள் என எனக்கு தெரியும். இருந்தாலும் சொல்கிறேன். யோகா என்பது நம் பாரத தேசத்திற்கு சொந்தமானது இல்லை. அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது. ஏதோ ஒன்றை நாம் புதியதாக கண்டுபிடித்தால், அதை ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவிற்கு சொந்தம் என கூறலாம். ஆனால், ஏற்கனவே இருக்கும் உண்மையை கண்டு உணர்ந்தால், அது உங்களுக்கோ அல்லது எனக்கோ சொந்தமில்லை. முழுமை அடைய விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த உரிமை உள்ளது. சர்வதேச யோகா தினம் என்பது ஒரு கொண்டாட்ட தினம் கிடையாது. இது உறுதி ஏற்கும் தினம். நீங்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்த நிலையில் இருந்து, இந்த உலகிற்கு சிறந்த பங்களிப்பை அளிக்க உறுதி ஏற்கும் தினமாகும்,"என்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில், யுனெஸ்கோவின் அமைதிக்கான கலைஞர் டாக்டர் குய்லா க்ளாரா கெஸாஸ், சத்குருவுடன் கலந்துரையாடினார். அப்போது, மனித குலத்திற்கு யோகாவின் தேவை குறித்த கேள்விக்கு சத்குரு பதில் அளிக்கையில்," வசதியான தேசமான அமெரிக்காவில் ஒவ்வொரு இரண்டு அமெரிக்கர்களில் ஒருவர் தனிமையில் வாடுவதாக மருத்துவத்துறையினர் கூறுகின்றனர். உலகின் மக்கள் தொகை, 8.4 பில்லியனாக இருக்கும் சூழலில், அவர்கள் தனிமையில் வாடுவது எந்த வகையில் சரியாக இருக்கும். இதற்கு காரணம், ஒவ்வொருவரும் தங்களை சுற்றி ஒரு தனித்துவமான சுவரை எழுப்பி கொள்கிறார்கள். தங்களின் சுய பாதுகாப்பிற்கு என உருவாக்கிய அந்த சுவரை விட்டு அவர்களால் வெளிவர முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள். இன்று நீங்கள் சுய பாதுகாப்பிற்காக என உருவாக்கும் இது போன்ற சுவர்கள், நாளை உங்கள் சுய சிறையாக மாறிவிடும். தனிமையில் வாடுவது மன நோயின் முதல் அறிகுறி. அதனால், யோகாவின் தேவை இப்போது மிக மிக அவசியமாகிறது. யோகா என்றால் சங்கமம். அங்கு தனிமை என்ற பேச்சிற்கே இடமில்லை,"என்றார். இந்நிகழ்ச்சியில், யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் ஆட்ரி ஆசுலே, நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதர் விஷால் சர்மா மற்றும் பாலஸ்தீன், செக் குடியரசு, மோரோக்கோ, பெரு, ரோமானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் என, 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஈஷா க்ரியா என்ற எளிமையான யோகா பயிற்சியை சத்குரு, பார்வையாளர்களுக்கு பரிமாறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar