விவசாயி ஒருவர் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தார். கடும் உழைப்பாளி. இதனால் இவர் மீது பொறாமைப்பட்டார் கொண்டார் இவரது தம்பி. காரணம் அவரும் ஒரு விவசாயி. ஆனால் செல்வந்தர், உழைப்பில் ஆர்வம் இல்லாதவர். எப்படியாவது தன் அண்ணனையும் சோம்பேறியாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டார். ஆனால் எதுவும் பலிக்கவில்லை. கடைசியில் தன்னிடம் இருந்த செல்வத்தில் பாதியை அண்ணனுக்கு கொடுத்தார். அவ்வளவுதான் அவரிடம் எல்லா கெட்டப்பழக்கங்களும் தொற்றிக் கொண்டன. நிம்மதி குறைந்தது. பார்த்தீர்களா... இன்பம், துன்பம் என வாழ்க்கையில் எது வந்தாலும், மனதை சமநிலையில் வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் நல்லது.