கற்பக விநாயகர் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2023 12:06
கோவை : ஒண்டிப்புதூர் கம்பன் நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் வாராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி கடந்த 18 ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. 9 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று (26ம்தேதி) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வாராகி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.