திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்: 24மணி நேரம் காத்திருப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2023 11:06
திருப்பதி: திருமலை திருப்பதியில் கோடை விடுமுறை முடிந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், காத்திருப்பு மண்டபங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துவருகிறது. நேற்று காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களுக்கு 24 மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தர்ம தரிசனத்திற்கு, 24 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.