பூப்பல்லக்கில் பவனி வந்த சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2023 04:07
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தேவியருடன் அய்யனார் பூப்பல்லக்கில் பவனி வந்தார்.
ஜூன் 25ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் வைகாசி விசாக திருவிழா பத்து நாள் மண்டகப்படியாக நடந்தது. ஜூன் 29ல் திருக்கல்யாணம், 30 ம் தேதி கழுவன் திருவிழா, ஜூலை 3ம் தேதி தேரோட்டம் நடந்தது. அடைக்கலம் காத்த நாட்டார்களின் மண்டகப்படியான ஜூலை 4 ம் தேதி இரவு பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது. மல்லிகைப்பூ மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் இரவு 2:00 மணிக்கு பூரணை புட்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் ஐயனார் எழுந்தருளினார். அதிகாலை 4:00 மணிக்கு பூப்பல்லக்கு உற்சவம் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து 5:10 மணிக்கு கோயில் முன்பாக வந்தடைந்தது. பூப்பல்லக்கு புறப்படுவதற்கு முன்பும் வந்து சேர்ந்த பின்பும் மங்கள வாத்தியம் நாதஸ்வர கச்சேரி இசைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூ பிரசாதமாக வழங்கப்பட்டது.