இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 252வது உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2023 05:07
சென்னை: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி தமிழகமெங்கும் பிரதி மாதம் ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வரும் 15ம் தேதி சனிக்கிழமை கங்கைகொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர் கோயிலிலும், 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தாஞ்சாவூர், பெருவுடையார் கோயிலிலும், 17ம் தேதி திங்கட்கிழமை திருவையாறு, ஐயாறப்பர் கோயிலிலும் உழவாரப்பணியை செய்ய இருக்கிறது. இக்கோயிலில் அன்று மாலை 4.00 மணிக்கு உலக மக்கள் நலன் வேண்டி கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெறுகிறது.
இந்த உழவாரப்பணியில் 400க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள். திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானால் துவங்கப்பட்ட உழவாரப்பணியை தொடர்ந்து அடியார்களுடன் உழவாரப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இறைவனின் திருவருள் பெறலாம்.
தொடர்புக்கு: எஸ். கணேசன், நிறுவனர், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், மொபைல்: 9840123866.
உழவாரப்பணியில்
1. விழிப்புணர்வு திருவீதியுலா
2. உழவாரப்பணி (தூய்மை செய்தல்)
3.சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்று நடுதல்
4. பிளாஸ்டிக் தவிர்க்கும் வகையில் துணிப்பை வழங்குதல்
5. ஐந்தெழுத்து மந்திரம் ஓதி அடியார்கள் இணைந்து திருநீறு தரித்து கண்டமணி அணிந்து உலக நலன் வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது.