காளஹஸ்தி முத்தியாலம்மா கோயிலுக்கு வெள்ளி கலசம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2023 05:07
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான (கிராம தெய்வமுமான) முத்தியாலம்மா தாயாருக்கு 300 கிராம் எடை கொண்ட வெள்ளியால் செய்யப்பட்ட கலசத்தை ஸ்ரீ காளஹஸ்தியை சேர்ந்த (கோபி கிருஷ்ணா ஹோட்டல் உரிமையாளர்) கோபால் ரெட்டி தம்பதியினர் சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கலசத்தை இன்று வெள்ளிக்கிழமை முத்தியாலம்மனுக்கு நன்கொடையாக சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு முன்னிலையில் அம்மனுக்கு வழங்கினர் . முன்னதாக நன்கொடையாளருக்கு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் கோயில் அதிகாரிகள் நன்றி தெரிவித்ததோடு கோயில் வளர்ச்சிக்காக காணிக்கையாளர்கள் மற்றும் நன்கொடையர்கள் முன்னுக்கு வர வருவதோடு காணிக்கையை வழங்கி கோயில் வளர்ச்சி பணிகளுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு அம்மனை தரிசனம் செய்ததை தொடர்ந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து கோயில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.