பழநி: பழநி முருகன் கோவிலுக்கு ஞாயிறு விடுமுறையால் அதிக பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகம் வருகை புரிந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் சிலமணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். அடிவாரம் முக்கிய வீதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை நேரத்தில் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் பஸ் ஸ்டாண்டில் பேருந்துக்காக காத்திருந்தனர்.