நத்தம் வேணுகோபாலசுவாமி கோவிலில் சர்வ ஏகாதசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2023 05:07
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா ருக்குமணி சமேத வேணுகோபாலசுவாமி கோவிலில் ஆனி மாத சர்வ ஏகாதசி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி மூலவர் வேணுகோபாலசாமிக்கும், அம்பாளுக்கும் திருமஞ்சனம், விஸ்வரூ பூஜைகள், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.முன்னதாக துளசி, ரோஜா, மல்லிகை, சம்மங்கி, உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் செலுத்தி தரிசனம் செய்தனர். இதில் நத்தம் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போலவே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலிலும் ஏகாதேசி சிறப்பு பூஜைகள் நடந்தது.