சிவகாசி: சிவகாசி சத்ய சாயி சேவா சமிதியின் சார்பில், உலக மக்கள் மன அமைதி பெறவும், மழை பெய்து, குடிநீர் பஞ்சம் விலக வேண்டி, சிவகாசி ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.108 கலசங்களில், தம்பதி சமேதராய் மானச பூஜையுடன் கூடிய, சத்ய நாராயண விரத பூஜை யுடன்,கூட்டு பிரார்த்தனையும் நடந்தது. ஏற்பாடுகளை மாவட்ட ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் பசுபதி, கன்வீனர் பகவான்தாஸ், விநாயக பிரபு, பரமசிவம், மகேந்திரன் செய்திருந்தனர்.