தாளக்கரை லக்ஷ்மி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2023 05:07
அவிநாசி: அவிநாசி அருகே லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான மராமத்து பராமரிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
அவிநாசி அடுத்த சேவூர் ஒன்றியத்தில், தண்டுக்காரன்பாளையம் பகுதிக்குட்பட்ட தாளக்கரை லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக கோவிலில் மராமத்து பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது. முன்னதாக கடந்த மே மாதம் 25ம் தேதி,திருப்பணிகள் தொடங்குவதற்காக பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரங்கள், கருவறை விமானங்கள்,சிற்பங்கள் என மராமத்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் லக்ஷ்மி நரசிம்மர் மூலவர் சன்னதிக்கு பக்தர்கள் சென்று அதே வழியில் திரும்பும் வகையில் இருந்த முறையை மாற்றம் செய்து,தற்போது மூலவர் சன்னதி முன்பாக உள்ள மண்டபத்தின் இடது பக்கத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியேறும் வகையில் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான மராமத்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது குறித்து கோவில் செயல் அலுவலர் செந்தில் குமார் கூறுகையில், திருப்பணிவேலைகளில் தற்போது கோபுர விமானம்,முன் மண்டபம், பக்தர்கள் தரிசனம் முடித்து வெளியேறுவதற்கான சிறப்பு வழி,பிரகாரங்களில் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. செப்டம்பர் மாதத்தில்,கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக பணிகளை விரைவாக செய்து வருகின்றோம்.