நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2023 06:07
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் 4ம் திருநாளில் இன்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் சிறப்பாக நடந்தது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில் நான்காம் திருநாளான நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடந்தது. இதில் காந்திமதிஅம்மன் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மேளதாளம் முழங்க சுவாமி சன்னதிக்கு சென்று சுவாமியிடம் பட்டு வாங்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு வளைகாப்பு, நலுங்கு, வளையல் அணிவிக்கும் உற்சவம் நடந்தது. தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.