பதிவு செய்த நாள்
18
ஜூலை
2023
11:07
மழைக் காலத்தின் துவக்கமான ஆடிமாதத்தில் நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய்கள் பரவாமல் இருக்கவும், அம்மனுக்கு முன்னோர்கள் பண்டிகைகள் நடத்தினர். ஆடி மாத செவ்வாய், ஆடிவெள்ளியில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தும், கூழ் ஊற்றியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இதனால் ஆடி மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்று முதல் ஆடிச்செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சூலூர் சிவன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், சோமனூர், செங்கத்லுறை, சுப்பராயன் புதூரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி கோவில்களில் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் விஷேமானது என்பதால் அம்பாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இன்று ஆடி செவ்வாயை முன்னிட்டு அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேனி மேலப்பேட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நெல்லை, மதுரை என அனைத்து அம்மன் கோயில்களிலும் ஆடிச் செவ்வாய் கிழமையை முன்னிட்டு, காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.