அலங்காநல்லூர்: மதுரை காஞ்சரம் பேட்டை அருகே பாறைப்பட்டி பேசும் கன்னிமார் கோயிலில் ஆடி மாத பிறப்பு, சர்வ அமாவாசை வழிபாடு நடந்தது. ஏழு கன்னிமார் அம்மனுக்கும் நாணல் புல், பட்டாடை அணிவித்து, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட மலர்களால் சிறப்பு பூஜை நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பக்தர்கள் கூட்டு வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக கிராம சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.