ராம நாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு ‘ராம கோடி’ என்று பெயர். ராமகோடி எழுதுவதாக வேண்டிக் கொண்டவர்கள் தினமும் 1000 முறை ‘ராம்’ என்றோ ‘ஸ்ரீராம ஜெயம்’ என்றோ எழுத வேண்டும். 30 ஆண்டுகளில் இந்த விருப்பம் நிறைவேறும். எழுதிய நோட்டுகளை பூஜையறையில் வைப்பது அவசியம். எண்ணிக்கையில் மட்டும் கவனம் வைக்காமல் பக்தியோடு எழுதினால் அதுவே நாளடைவில் தவமாகி விடும். மந்திரம் எழுதிய நோட்டுகளை பூஜையறையில் வைத்து வழிபட்டால் உங்கள் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.