சாலையோர மர நிழலில் சாப்பிட்டார் பெரியவர் ஒருவர். அப்போது அவர் குடிப்பதற்கு வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை காலால் தட்டிவிட்டு சென்றார் ஒருவர். சாப்பிட்டு கொண்டிருந்த பெரியவருக்கு விக்கல் எடுத்தது. காரில் இருந்த சிறுமி ஒருத்தி இதை கவனித்தாள். அவருக்கு தண்ணீர் பாட்டிலை கொடுத்தாள். மகளின் செயலைக்கண்டு பூரிப்பு அடைந்தாள் சிறுமியின் தாய். தாகம் எடுப்பவருக்கு தண்ணீர் கொடுங்கள். வானுலகில் இளைப்பாற இடம் உண்டு என்கிறது பைபிள்.