உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2023 12:07
திருச்சி; உறையூர் கமலவல்லி தாயார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு காவேரியில் இருந்து யானை மீது வெள்ளி குடம் புறப்பாடு, புனித நீர் எடுத்து வருதல் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு யானை மீது காவிரி ஆற்றுக்கு வெள்ளிக்குடம் எடுத்துச்செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து, ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு மங்களஆரத்தி நடைபெறுகிறது. சனிக்கிழமை திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.