நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் மயிலாடு துறை மாவட்டத்திலுள்ள திருவெண்காடு தலத்திற்கு வந்தார். இங்குள்ள சுவாமியின் திருநாமம் சுவேதாரண்யேஸ்வரர், அம்பாளின் திருநாமம் பிரம்மவித்யாம்பிகை. இங்குள்ள மணல்கள் எல்லாம் அவருக்கு சிவலிங்கமாக தெரியவே கோயிலுக்கு எப்படி செல்வது என யோசித்தார். அம்பிகையிடம் வேண்டினார். அங்கு மானிட வடிவம் எடுத்து வந்த அம்பிகை இடுப்பில் துாக்கி வைத்து திருஞானசம்பந்தரை கோயிலுக்கு அழைத்து வந்தாள். கோயிலின் மேற்கு பிரகாரத்தில் பிள்ளை இடுக்கியம்மனுக்கு சன்னதி உள்ளது. இந்த அம்மனை தரிசிப்பவர்களுக்கு அடுத்து வரும் போது குழந்தையுடன் வருவார்கள் என்பது நியதி.