அம்பாளுக்குரிய நாள் ஆடிப்பூரம். இதற்காக 10 நாட்கள் தினமும் காலை, மாலையில் ஒவ்வொரு வாகனத்திலும் அம்பிகை காட்சி தருவார். சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள், காஞ்சிபுரம் காமாட்சி, சிதம்பரம் சிவகாமி, திருக்கடையூர் அபிராமி, திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினம் நீலாயதாட்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, மதுரை மீனாட்சி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, ஸ்ரீவில்லி புத்துார் ஆண்டாள், சங்கரன்கோயில் கோமதி, பாபநாசம் உலகம்மை, குற்றாலம் குழல்வாய்மொழி, திருநெல்வேலி காந்திமதி கோயில்களில் நடைபெறும் ஆடிப்பூர உற்ஸவம் சிறப்பானவை.