காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி சாரதா பீடத்தின் பக்தர் தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரி. இவருக்கு கண்பார்வை ஒரு சமயம் மங்கியது. மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்து தனக்கு பார்வை அருள வேண்டும் என பாடல்கள் பாடினார். அதன் பயனாக பார்வையை பெற்றார். இன்றும் பார்வை கோளாறு உள்ளவர்கள் அவரது பாடல்களை பாடி, மீனாட்சியம்மனை தரிசித்து நல்வாழ்வு பெறுகின்றனர்.