சீதப் புனலாடி சிற்றம்பலம்பாடி என சிவபெருமானை திருவெம்பாவையில் மாணிக்கவாசகர் போற்றுவார். ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் அருள் புரிபவர் மங்களாம்பிகை, மங்களநாதர். இக்கோயில் தீர்த்தவாரி உற்ஸவம் சீதப்புனல் என்னும் சீதளா தீ்ர்த்தத்தில் நடைபெறும். இதன் கரையில் சுயம்பு வராகி அம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மனுக்கு இந்த தீர்த்தமே பயன்படுத்தப்படுகிறது.