தாண்டிக்குடி , தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ஆடி வெள்ளி மற்றும் மண்டல பூஜை விழா நடந்தது. இக்கோயிலில் ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வருகின்றன. ஆடி வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் ஹோமம் நடந்தது. ராஜா அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.