ராமேஸ்வரம் ராமநாதசுவாமியை தரிசனம் செய்தது மனதிற்கு அமைதி : அமித்ஷா புகழாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2023 07:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்தது மனதிற்கு அமைதி, திருப்தி அளிக்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
இன்று அதிகாலை 5:45 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். அவருக்கு கோயில் குருக்கள் பூ மாலை அணிவித்து வரவேற்றனர். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின் கோயில் குருக்கள் அமிதாவுக்கு பிரசாதம் வழங்கினர். இதன்பின் கோயில் விசிட்டர் புத்தகத்தில் அமித்ஷா, குஜராத்தி மொழியில் எழுதினார். இதில், இக்கோயிலில் தூய்மையாகவும், நல்ல சிறப்பாகவும் பராமரித்து உள்ளனர். கோயில் ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இங்கு சுவாமி தரிசனம் செய்தது மன அமைதியும், திருப்தியும் அளிக்கிறது என புகழாரம் சூட்டி குறிப்பிட்டுள்ளார். இதன்பின் காலை 12:20 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடுக்கு சென்று, அங்கிருந்து கலாம் பேரன் சேக் சலீம், உறவினரிடம் நலம் விசாரித்தார். பின் அங்கிருந்து காரில் புறப்பட்டு மதியம் 12:45மணிக்கு பாம்பன் குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று சுற்றி பார்த்தார். பின் இங்கிருந்து காரில் புறப்பட்டு மதியம் 1:25 மணிக்கு மண்டபத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.