திருப்பாசேத்தியில் கோயில்களுக்கு தயராகும் ராட்சத அருவா, பொதுமக்கள் வியப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2023 06:07
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் பக்தர்கள் கோயில்களுக்கு நேர்த்திகடனாக வழங்கும் ராட்சத அருவா தயாரிக்கப்பட்டு வருகிறது. அருவா விற்கு பெயர் பெற்ற திருப்பாச்சேத்தியில் கருப்பண்ணசாமி கோயில்களுக்கு நேர்த்தி கடன் அருவா தயாரிக்கப்படுகிறது. ஐந்து அடி முதல் 21 அடி உயரம் கொண்ட அருவா தயாரிக்கப்படுகிறது. இதற்காக தயாரிப்பாளர்கள் மதுரையில் இருந்து பழைய கனரக வாகனங்களின் இரும்பு பட்டாக்களை வாங்கி வந்து பட்டறையில் நெருப்பில் இட்டு தட்டி தட்டி அருவா தயாரிக்கின்றனர். ராட்சத அருவாவின் எடையை பொறுத்து வேலை செய்யும் நாட்கள் அதிகரிக்கும், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் புதிதாக கட்டப்படும் கோயிலின் முன்புறம் இருபக்கமும் நிலை நிறுத்துவதற்காக 21 அடி உயரமும் 225 கிலோ எடையும் கொண்ட அருவா தயாரிக்க கேட்டு கொண்டுள்ளார். அதற்காக திருப்பாச்சேத்தியை சேர்ந்த கருப்பையா, சரவணகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து 21 அடி உயர அருவா தயாரித்து வருகின்றனர்.
கருப்பையா கூறுகையில்: 21 அடி உயர அருவா தயாரிக்க நான்கு பேர் சேர்ந்து பத்து நாட்கள் வரை ஆகும், மாசி மாதங்களில் கருப்பண்ணசாமிக்கு நேர்த்தி கடனாக செலுத்த அருவா வாங்கிச் செல்வார்கள், ஐந்து அடி உயரத்தில் இருந்து 21 அடி உயரம் வரை செய்கிறோம், இந்த அருவா 21 அடி உயரமும் 225 கிலோ எடையும் கொண்டது. 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கைப்பிடி அமைக்க வேண்டுமென்றால் கூடுதலாக செலவாகும், ஆனால் சிமெண்ட் பீடத்தில் போல்ட் மற்றும் நட்டுகள் அமைத்து நிலை நிறுத்த உள்ளதால் கைப்பிடி அமைக்கப்பட வில்லை. இரண்டு அருவாக்களும் சேர்த்து மொத்தம் 450கிலோ எடை, என்றார்.