அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2023 04:08
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் நடைபெறுகிறது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான சிவாலயமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் முதன்மையானதாகவும் விளங்கும் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23ம் தேதி கோவிலில் உள்ள பரிவார சன்னதி விமானங்களுக்கு, கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று,பாலாலயம் செய்யப்பட்டது. தற்போது ஏழு நிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய திருப்பணிக்குழு சார்பில் முடிவு செய்யப்பட்டு,வரும் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னியா லக்கன வேளையில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று பாலாலயம் செய்யப்பட உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு,இறையருள் பெற திருப்பணிக்குழு சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.