Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பெருக்கு: கோயில்களில் சிறப்பு ... அரலாற்றில் ஆடிப்பெருக்கு விழா; விளக்கு ஏற்றி வழிபட்ட பக்தர்கள் அரலாற்றில் ஆடிப்பெருக்கு விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரைபுரண்டு ஓடும் காவிரியில் ஆடி பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
கரைபுரண்டு ஓடும் காவிரியில் ஆடி பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

03 ஆக
2023
12:08

தஞ்சாவூர்,டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில், ஆடி பெருக்கு விழா வெகு உற்சாகமாக நடந்தது.

தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில், ஆடி 18ம் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழவேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது தனி சிறப்பு பெற்றது.

அதன்படி இந்தாண்டு காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்கு விழா களைகட்டியது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு  புஷ்ப மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப்பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக் கொருவர் கழுத்தில் அணிவித்தனர். புதுமண தம்பதிகள் காவிரியில் புனித நீராடி புத்தாடை அணிந்து  காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர். காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். இதே போல கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, திருக்காட்டுப் பள்ளி காவிரி கரையோரங்களிலும், மயிலாடுதுறை துலாக்கட்டம் என கல்லணை முதல் பூம்புகார் வரையிலான டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை வழிபட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar