கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் புரட்டாசி மாத சிறப்பு நிகழ்வான பெருமாள் கருட சேவை நடந்தது. கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் அலர்மேல்மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாதத்தை முன்னிட்டு அந்த கோவிலில், 23ம் ஆண்டு சுதர்சன ஹோமம், லட்சார்ச்சனை, கருட சேவை உற்சவங்கள் சிறப்பாக நடந்து வருகிறது.சிறப்பு நிகழ்வான கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நேற்று காலை கோவிலில் இருந்து புறப்பட்டு, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக வந்தது.