ஆடி அமாவாசை புனித நீராடல்; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2023 03:08
தேவிபட்டினம்; நாளை ஆடி அமாவாசை தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வசதிக்கான ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்திற்கு ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த நிலையில், ஆக.16 ஆடி அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால், நவபாஷாண கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுப்பதற்காக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர கூடும் என்பதால், நவபாஷாணத்தில் பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் நவபாஷாண கடற்கரையில் இருந்து நவக்கிரகம் அமைந்துள்ள கடல் பகுதி வரை கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஒருவழி பாதையாக பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நவபாஷாணத்தை நிர்வகித்து வரும் ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.