திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பரங்குன்றம் அத்வைதானந்தா உழவார பணிகுழு சார்பில் உழவார பணிகள் நடந்தன. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தில் நெய் விளக்கேற்றுதல், வாசலில் ஆடு, கோழி பலியிடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும், ஆடி மாதம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருந்தது. உழவார பணிகுழு சார்பாக கோயில் வளாகம் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ததுடன், வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், பேப்பர்கள் உள்ளிட்ட அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. உழவார பணிகளை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் செய்திருந்தார்.