ராமகாதை உபன்யாசம் கேட்க வந்த இங்கிலாந்து பிரதமர் ; ஜெய் ஸ்ரீராம் கூறி உறையாற்றினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2023 10:08
லண்டன்: ராமகாதை உபன்யாசம் கேட்க வந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெய் ஸ்ரீராம் கூறி உறையாற்றினார். பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.
ஆன்மிக தலைவர்களில் ஒருவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 20ம் தேதி முடிவடையும் நிகழ்ச்சியில், இந்திய சுதந்திர தினமான நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஜெய் ஸ்ரீராம்.. இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன். நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது. இங்கிலாந்து பிரதமர் தனது உரையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் ஜெய் ஸ்ரீராம் என கூறியது அங்கிருந்தோரை நெகிழ்ச்சி அடைய செய்தது.