‘அவதரித்தல்’ என்பதற்கு ‘இறங்குதல்’ என்பது பொருள். வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணு, பூமிக்கு இறங்கி வருவதை அவதரித்தல் என்கிறோம். விண்ணுலகில் இருந்தே தீயவர்களை அழிக்க முடிந்தாலும், ‘சிஷ்ட பரிபாலனம்’ என்னும் நல்லவர்களைக் காக்கும் செயலை நேரடியாக செய்ய கடவுள் விரும்புகிறார். தர்மவழியில் வாழ்ந்து காட்டுவதோடு மற்றவர்களும் அதைக் கடைபிடிக்க வேண்டும் என மண்ணில் அவதரிக்கிறார். நல்லவரைக் காத்தல், தீயவரை அழித்தல், தர்மத்தை நிலைநாட்டுதல் ஆகிய மூன்று கடமைகளை நிறைவேற்றுவதே விஷ்ணுவின் அவதார நோக்கம்.