லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பெருமாள் கோவில் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை, அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள், கோவிலில், புதன் மற்றும் ஏகாதசி ஆகிய நாட்களில் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் அருகில் உள்ள பகுதிகளை சிலர், ஆக்ரமிப்பு செய்துள்ளதால், பொதுமக்கள் கோவில் வளாகத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, "பெருமாள் கோவில் அருகில் உள்ள ஆக்ரமிப்புகளை கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அகற்ற தே வையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.