திருக்கோவிலூர் தபோவனத்தில் 15ம் தேதி நவராத்திரி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2012 10:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தா தபோவனத்தில் சரத் நவராத்திரி விழா வரும் 15ம் தேதி கடசஸ்தாபனத்துடன் வங்குகிறது. திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் 10 நாள் சரத் நவராத்திரி விழா வரும் 15ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு வேதவிற்பணர்களின் மந்திரங்கள் முழங்க கடஸ்தாபனம் நடந்தது. மறுநாள் (16ம் தேதி) முதல் 23ம் தேதி வரை தினசரி அதிகாலை 5.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீ சக்கர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, நவராத்ரி மண்டபத்தில் மேருவிற்கு லட்சார்ச்சனை, ஸ்ரீ ஞானாம்பிகைக்கு சகஸ்சர நாமார்ச்சனையும் நடக்கிறது. தினசரி காலை 8.30 மணி முதல் 10 மணி வரை துர்கா ஸப்தஸதீ பாராயணம், மாலை 3 மணிக்கு பக்தி பாடல்கள் இசைக்கப் படுகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 24ம் தேதி விஜயதசமி அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாஸினி, தம்பதி பூøஐயுடன் நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், ஸ்ரீ மஹிஷாசூரமர்தினி புறப்பாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சுப்புராமன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்