பதிவு செய்த நாள்
10
அக்
2012
10:10
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில், பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன்சிலைகள் திருடு போனதை தொடர்ந்து, நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்,சிலைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன்கள் சிலைகளை தலைமை அர்ச்சகர் செந்தில் திருடினார். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 19 ஐம்பொன் சிலைகள், மீனாட்சியம்மன் கோயிலில் 6 ஐம்பொன் சிலைகள், வெள்ளி ஆபரண பொருட்கள், பித்தளை சாமன்கள் திருடுபோனதாக தென்கரை போலீசாரிடம், செயல் அலுவலர் சுதா புகார் அளித்துள்ளார். செந்திலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார், வெவ்வேறு இடங்களில் விற்பனை செய்த 7 ஐம்பொன் சிலைகளை மீட்டுள்ளதாக தெரிகிறது. திருடப்பட்ட ஐம்பொன்சிலைகளை, வாங்கியவர்களிடம் அர்ச்சகர் செந்திலை உடன் அழைத்துக்கொண்டு தேடும் பணி நடந்து வருகிறது. பாலசுப்பிரமணியர் கோயில், மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், நகை மற்றும் சிலைகளின் மதிப்பீட்டாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோயிலில் மொத்த சிலைகள் எத்தனை, இருக்கின்ற சிலையின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.