பதிவு செய்த நாள்
20
ஆக
2023
11:08
கருமத்தம்பட்டி: செம்மாண்டாம்பாளையம் ராஜிவ் நகர் ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டாம் பாளையம் ராஜிவ் நகரில் மகா கணபதி, ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, கோபுரம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 18 ம்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு, பல்வேறு கோவில்களில் இருந்து மேளதாளத்துடன் முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து முதல்கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை, இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, 7:30 மணிக்கு விமான கலசங்களுக்கும், தொடர்ந்து ஸ்ரீ உச்சி மாகாளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. அபிஷேக, அலங்கார பூஜைக்குப்பின் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.