பதிவு செய்த நாள்
21
ஆக
2023
10:08
அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தி சென்ற நடிகர் ரஜினி, அனுமன்கார்கியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினி கடந்த வாரம் இமயமலை யாத்திரை சென்றார். அங்கு பல்வேறு கோவில்களுக்கு சென்ற அவர், தமிழகம் திரும்பும் வழியில், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். இதைத் தொடர்ந்து உத்தர பிரதேசம் வந்த அவர், நேற்று முன்தினம் மாநில கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில், ரஜினி நேற்று அயோத்தி ராமர் மற்றும் ஹனுமன் கோவிலுக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்த அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். முன்னதாக நேற்று காலை, உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் ரஜினி சந்தித்தார். இதுகுறித்து பேசிய ரஜினி, ஒன்பது ஆண்டு களுக்கு முன், மும்பையில் நடந்த ஒரு விழாவில் அகிலேஷை சந்தித்தேன். அன்று துவங்கிய நட்பு தொடர்கிறது,” என்றார்.