சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் ஊராட்சி பெத்தியகவுண்டன்பட்டியில் உள்ள விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில்களில் நடந்த திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நேற்று கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு பூஞ்சோலையில் கரகம் ஜோடிக்கு பூக்கள் அலங்காரத்தில் காளியம்மன் எழுந்தருள தேவராட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் கரகம் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காளியம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடாய் வெட்டுதல் மற்றும் தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை பெத்தியகவுண்டன்பட்டி, உழவர்குடி, கிராம மக்கள் செய்திருந்தனர்.